Home
You Are Here: Home » News » Andhra Pradesh » சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார்

சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார்

சீமாந்ந்திரா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார். இவ்விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட 7ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு 13 மாவட்டங்களுடன் கூடிய புதிய ஆந்திர மாநிலத்தின் முதலாவது முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று இரவு 7.27 மணியளவில் பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். பதவி ஏற்பு விழா குண்டூர் மாவட்டம் நாகார்ஜுனா பல்கலைக்கழகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்பட 7 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழா முடிந்த பின்னர், தேர்தல் பிரசாரத்தின் போது உறுதி அளித்த 3 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், விவசாயக்கடன் மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடி, அனுமதியின்றி செயல்படும் மதுக்கடைகளை மூடுதல், என்டிஆர் சுஜலா திட்டத்தின்கீழ் குடிநீர் திட்டம் ஆகிய 3 கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுடன் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்து 11 அல்லது 17 பேருடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top