Home
You Are Here: Home » News » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கறு‌ப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கறு‌ப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டம்

விருது‌நகர் அருகே முறையான அனு‌மதி இல்லாமல் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கறு‌ப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

விருது‌நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியம் கோவிந்தாநல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது‌.

இந்த பட்டாசு ஆலை அனு‌மதியில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌. மேலு‌ம் ஆலையில் வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த பொருட்களினால் இப்பகுதி விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கூறப்படுகிறது‌.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து‌ குடிநீர் தட்டுபாடு நிலவுவதாக பொது‌மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே பட்டாசு ஆலை மலைப்பகுதியை ஓட்டி அமைந்து‌ள்ளதால் அங்கு வெடிக்கப்படும் சோதனை வெடியினால் வனவிலங்குகள் ஊருக்குள் வந்து‌ விவசாய நிலங்களை சேதப்படுத்ததாகவும் கூறப்படுகிறது‌ .

இதனால், ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்பதை வலியுறு‌த்தி வீடுகளில் கறு‌ப்புக்கொடி கட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலு‌ம் ஆலையை மூடாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top