Home
You Are Here: Home » News » பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் – இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் – இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி

பிரெஞ்ச ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ரஷ்ய விராங்கனை மரியஷரபோவாவும், சிமோனா ஹலப்பும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது இதில் ரஷய வீராங்கனை மரிய ஷரபோவாவும்,யூஜின் புஜ்ஜார்டும் மோதினர். இதில் ஷரபோவா அபாராமாக விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6,7-5,62 என்ற நேர்செட்டில் புஜ்ஜார்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.

இன்று நடைபெறும் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் மரிய சரபோவாவும், 4ம் நிலை வீராங்கனை சிமோனா ஹலப்பும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதேபோல ஆண்களுக்கான அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல்நடாலும் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேயும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெற உள்ள ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் நடாலும், ஜோகோவிச்சும் பிரெஞ் ஒபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top