Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » அரியலூர் அருகே வாகனஓட்டிகள் மீது வழக்குபதிவு

அரியலூர் அருகே வாகனஓட்டிகள் மீது வழக்குபதிவு

அரியலூர் அருகே வாகன விபத்தில் 15பேர் பலியானதையடுத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்குமுன் அரியலூர் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 15பேர் பலயாகினர். விபத்துக்கு காரணம் லாரி ஓட்டுனர் மதுஅருந்தி வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை, மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக வாகன ஆய்வு நடைபெற்றது.

இதில் ஓட்டுனர் உரிமம், செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியது. அனுமதியில்லாமல் அதிக பாரம் ஏற்றிச்செல்வது என விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 300க்கும் மேற்பட்ட வாகனஓட்டிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் அவர்களிடமிருந்து 4 நாட்களில் 6 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வட்டார போக்குவரத்து அதிகாரி அழகிரிசாமி கூறும்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களின் மீது கடும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top