Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » திட்டக்குடியில் அரசு அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

திட்டக்குடியில் அரசு அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் அரசு அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திட்டக்குடியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதுடன், பறவைளை வேட்டையாடி வருவதாகவும், கடலூர் தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, தனிப்பிரிவு காவல் துறையினர் திட்டக்குடி பகுதியில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள கீழ்செரவாய் ஏரிக்கரை அருகே பெண்ணாடம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதனையடுத்து வடிவேலுவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொணடனர். அப்போது, பெண்ணாடம் கருங்குழிதோப்பு பகுதியை சேர்ந்த வேப்பந்தட்டான் என்பவரிடம் இருந்து துப்பாக்கியை பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் துப்பாக்கி உரிமம் பெறப்பட்டு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மற்றொருவர் துப்பாக்கியை பயன்படுத்திய குற்றத்திற்காக வடிவேலுவை காவல் துறையினர் கைது ‌செய்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top