Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கரூர் அருகே வீடுகளில் அதிக மின் அழுத்தம் – மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறிது

கரூர் அருகே வீடுகளில் அதிக மின் அழுத்தம் – மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறிது

கரூர் அருகே அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் டிவி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரை அடுத்துள்ள செல்லாண்டிபாளையம் மற்றும் கட்டாங்காடு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மின்தடை ஏற்படுவதும், திடீர், திடீரென குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக மின் அழுத்தம் போன்ற பிரச்னைகளும் அடிக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் செல்லாண்டிபாளையம் மற்றும் கட்டாங்காடு பகுதிகளில் திடீரென அதிக மின் அழுத்தம் ஏற்பட்டதில், வீடுகளில் இருந்த டி.வி., மின்விசிறி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்ததோடு, தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அத்துடன் வீடுகளில் உள்ள டியூப் லைட்களும் வெடித்துச் சிதறின. இச்சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு ‌புகார் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்த மின்சாதன பொருட்களை பார்வையிட்டனர்.

செல்லாண்டிபாளையம் மற்றும் கட்டாங்காடு பகுதிகளில் அடிக்கடி டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சில சமயங்களில் டிரான்ஸ்பார்மர் மூலம் சப்ளை செய்யப்படும் மின்சாரத்தில், ஏற்ற இறக்கம் இருப்பதால் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் பழுதை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top