Home
You Are Here: Home » News » ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று 39-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, அண்ணாபூங்காவில் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகையான ஒரு லட்சம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் ரோஜா மலர்களை கொண்டு மயில், சிங்கம் உருவத்தையும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வாத்து, பிள்ளையார், உள்ளிட்ட உருவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

கோடை விழாவில் இடம்பெற்றுள்ள பழக்கண்காட்சியில் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், உள்ளிட்ட ஏராளமான பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பூங்கா நுழைவு வாயிலில் பல்வேறு மலர்களால் அலங்கார வளைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலாப்பழம், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, பப்பாளி மூலம் தோரணம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க கண்காட்சியும் கோடை விழாவில் இடம்பெற்றுள்ளது. மலர் கண்காட்சி இன்று காலை 11.30 மணி அளவில் தொடங்குகிறது. இதில் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, நாடகம், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top