Home
You Are Here: Home » News » Andhra Pradesh » சீமாந்திர மாநிலத்தில் நாளை தெலுங்கு தேச அரசு பதவி ஏற்கிறது

சீமாந்திர மாநிலத்தில் நாளை தெலுங்கு தேச அரசு பதவி ஏற்கிறது

சீமாந்திர மாநிலத்தில் நாளை தெலுங்கு தேச அரசு பதவி ஏற்கிறது. முதல் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளார்.

சீமாந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 102 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு நாளை அங்கு பதவி ஏற்க உள்ளது. .

திருப்பதியில் இதற்காக நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பல நிர்வாகிகள் ஆளுநர் நரசிம்மனை நேற்றுமுன்தினம் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டனர்.” அப்போது, முதல்வருக்கான பதவியேற்கும் இடம், நேரம் ஆகிய விவரங்களை தெரிவிக்கும்படி ஆளுநர் கேட்டுள்ளார்.
எனவே சீமாந்திரா மாநில முதல் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு, குண்டூர்-விஜயவாடா இடையில் உள்ள நாகார்ஜுனா நகரில் நாளை 8ஆம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. தற்போதறைய நிலையில் தமது அரசு ஹைதராபாத் நகரிலிருந்தே இயங்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு நேற்று அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. .

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top