Home
You Are Here: Home » News » இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, 33 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, 33 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையிலிருந்த விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 33 பேரும் பத்திரமாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடந்த 31ந் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் மறுநாள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு சென்றதையடுத்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட துரித முயற்சிகளின் காரணமாக 33 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. அதன்படி விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் ராமேசுவரம் அழைத்து வரப்பட்டனர்.

ஆனால் படகுகளை அடுத்த ஜூலை 14-ந்தேதி விடுவிக்கப்படும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்‍.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்காக விரைவான நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top