Home
You Are Here: Home » News » Kerala » கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவ மழை தொடங்குகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு மழை தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. திருவனந்தபுரம், கொல்லம், கன்னூர், கோழிக்கோடு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் மாநிலத்தின் வட பகுதியிலும், மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top