Home
You Are Here: Home » News » வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சிறுமியின் உடல் மீட்பு

வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சிறுமியின் உடல் மீட்பு

வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சிறுமியின் உடல், நான்கு நாட்களுக்கு பிறகு இன்று ‌காலை மீட்கப்பட்டது‌.

வேலூர் மாநகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு சிறுமி தவறி விழுந்தார்.

தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். பாதாள சாக்கடையில் சிறுமி விழுந்த இடத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் வரை மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியை தேடினர்.

இந்நிலையல், சிறுமியின் உடல் பாலாற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்ததால், அங்கு விரைந்த மீட்புக்குழுவினர், இன்று காலை 7.30 மணியளவில் சிறுமியின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து‌முடிக்காததே இந்த விபத்து‌க்கு காரணம் என்று‌ம் பொது‌மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top