Home
You Are Here: Home » News » அனுமதியின்றி செயல்பட்டு வரும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அனுமதியின்றி செயல்பட்டு வரும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமேஸ்வரத்தி்ல் அனுமதியின்றி செயல்பட்டு வரும், அடிப்படை வசதிகளில்லாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கியமான புண்ணிஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தனியார் விடுதிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் அச்சத்தை போக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top