Home
You Are Here: Home » News » இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

தமிழர்களுக்கான அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மறு‌த்து‌வரும் இலங்கை அரசு, இந்திய மீனவர்களையும் து‌ன்புறு‌த்து‌வது‌ தொடர்கதையாகி வருகிறது‌. இந்நிலையில், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது‌ பதற்றத்தை அதிகரித்து‌ள்ளது‌.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதோடு, 15-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

அத்துடன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக்கொண்டனர். மேலும், இந்த தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னர், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்து விரட்டி அடித்துள்ளனர். இதனால், உயிர் பயத்தில் தமிழக மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர்.

மீனவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பி உள்ளதால், பல லட்சம் இழப்பு ரூபாய் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மறு‌ப்பு தெரிவித்து‌வரும் இலங்கை அரசின் அட்டூழியம் மட்டும் தொடர்கதையாகி வருகிறது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top