Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கரூர் அருகே தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த கற்கள் சட்டவிரோதமாக விற்பனை

கரூர் அருகே தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த கற்கள் சட்டவிரோதமாக விற்பனை

கரூர் அருகே பூமிக்கடியில் இருந்து தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த கற்களை சட்டவிரோதமாக பலர் தோண்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடவூர்‌, சேங்கல், கல்லுமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூமிக்கடியில் தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த பச்சை, சிவப்ப, வெள்ளை கற்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அரசுக்கு தெரியாமல் பலர், சட்டவிரோதமாக தோண்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக மழை காலங்களில் இந்த கற்கள் அதிக அளவில் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், வெள்ளியனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக பூமிக்கடியில் இருந்து கற்களை தோண்டி எடுக்கும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top