Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » ஒசூர் அருகே ஜெலெட்டின் குச்சிகள்‌ மற்றும் டெட்டேனட்டர்கள் எடுத்துச்சென்ற இருவர் கைது

ஒசூர் அருகே ஜெலெட்டின் குச்சிகள்‌ மற்றும் டெட்டேனட்டர்கள் எடுத்துச்சென்ற இருவர் கைது

ஒசூர் அருகே அனுமதியின்றி ஜெலெட்டின் குச்சிகள்‌ மற்றும் டெட்டேனட்டர்களை எடுத்துச்சென்ற இருவர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்‍

வெடிப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கிவைத்தலை தடுக்கும் வகையில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குவாரிகள்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒசூரை அடுத்த கதிரப்பள்ளி கிராமத்தில் மூட்டைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெலட்டின்குச்சிகள்‌,டெட்டனேட்டர்கள் ஆகிய வெடிக்கும் பொருட்களை அவர்கள் அனுமதியின்றி எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார்‌, அவர்களிடமிருந்து 100 ஜெலட்டின் குச்சிகள்‌, மற்றும் 200 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்‍.

கைது செய்ப்பட்ட இருவரும்‌,ஒசூர் ஹட்கோ காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சதிவேலைகளை அரங்கேற்றும் பொருட்டு இந்த வெடிபொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டனவா, என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top