Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » பாலமேட்டில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பாலமேட்டில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் மின்தடை முற்றிலும் நீக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அறிவித்த முதல்நாளே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. வழக்கம்போல் தினமும் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்‍.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாலமேடு அலங்காநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்‍.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்‌, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஒரு வாரத்திற்குள் மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்‍. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top