Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில்‌, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால்‌ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையிலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து ஓரளவு வெப்பத்தை தணித்து வருகிறது.

இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவ மழை தொடங்குவதன் அறிகுறியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சானி, உள்ளிட்ட அணைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் தற்போது கன்னிப்பூ சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

கடந்த 1ம் தேதி முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணை மழை காரணமாக மூடப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சராசரி அளவு அதற்கு அதிகமாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top