Home
You Are Here: Home » News » Andhra Pradesh » தெலுங்கு தேசம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு

தெலுங்கு தேசம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு

தெலுங்கு தேசம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதில், 10 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானாவில் வெற்றி பெற்று டிஆர்எஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதன் தலைவர் சந்திர சேகர ராவ் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

எஞ்சிய 13 மாவட்டங்களுடன் உள்ள சீமாந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக செனட் அரங்கில், இக்கட்சியின் சட்டப்பேரவை கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, ஆளுநர் நரசிம்மனை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதை ஏற்று ஆளுநர் அவரை ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுப்பார் என தெரிகிறது. பின்னர் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வரும் 8ம் தேதி பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இதனை முன்னிட்டு குண்டூரில் நாகார்ஜுனா பல்கலைக்கழகம் அருகில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top