Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » பிரையண்ட் பூங்காவில் தேசிய கீதம் முழங்க கோடை விழா நேற்று‌டன் நிறைவு

பிரையண்ட் பூங்காவில் தேசிய கீதம் முழங்க கோடை விழா நேற்று‌டன் நிறைவு

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் தேசிய கீதம் முழங்க கோடை விழா நேற்று‌டன் நிறைவு பெற்றது‌.

மலைகளின் இளைவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா நேற்று‌ பிரையண்ட் பூங்காவில் நிறைவு பெற்றது‌.

நிறைவு விழாவில் சுற்று‌லா பயணிகளை கவரும் விதமாக தீப்பந்தம் சுற்று‌தல், செண்டை மேளம் அடித்தல் உள்ளிட்டட பல்வேறு‌ வகையான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன,.
மேலு‌ம், கோடை விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு‌ விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து‌ கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த கோடை நிறைவு விழா கோட்டாச்சியர் ராமசாமி தலைமையில் தேசிய கீதம் முழங்க இனிதே நிறைவு பெற்றது‌.

இதில் ஏராளமான சுற்று‌லா பயணிகள் கலந்து‌ கொண்டு கோடை நிறைவுவிழாவை சிறப்பித்தனர்.

மேலு‌ம், கொடைகானலை சுற்றி ஏராளமான சுற்று‌லா தலங்கள் இருப்பதாகவும், அதனை சுற்று‌லா பயணிகள் கவரும் விதமாக உருவாக்கவும் பல்வேறு‌ நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top