Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் ஊழியர் கைது

கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் ஊழியர் கைது

கோவையில் வரி வசூல் ஆவணங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை காந்திபூங்கா பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார வேல். தங்கபட்டறை நடத்தி வரும் இவர், சமீபத்தில் ஒன்றரை செண்ட் இடத்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

அவ்வீட்டிற்கு வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்காக முத்துகுமார் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தில்லுள்ளார்.

இந்நிலையில், மாநகராட்சியில் பணிபுரியும் வசந்தா மணி என்பவர் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகுமார், , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை முத்துகுமார், வசந்த மணியிடம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில்,அங்கு பதுங்கி இருந்த அதிகாரிகள் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பெண் அதிகாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top