Home
You Are Here: Home » News » நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 40 பேர் பலி

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 40 பேர் பலி

நைஜீரியா கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு விபத்தில் 40 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது‌.

வடகிழக்கு நைஜீரியாவின் முபி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, திடீரென்று அந்த மைதானத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த கொடூர தாக்குதலில் குண்டு வெடிப்பில் உடல் கருகியும், கூட்ட நெரிசலில் மிதிபட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சரிசம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய மத சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று கூறி போகோ ஹரம் என்ற தீவிரவாதக் குழுவினர் அவ்வப்போது‌ தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று‌ வருகின்றனர்.

மேற்கத்திய கலாசாரம், ஆங்கில வழி கல்வியை எதிர்க்கும் இவர்கள் நூற்றுக்கணக்கான இளம் வயது மாணவிகளை கடத்திச் சென்று‌ அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் போவதாக நைஜீரிய அரசை மிரட்டிவரும் நிலையில், ‌நேற்று‌ நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலு‌க்கு இந்த அமைப்பினரின் சதிசெயலே காரணமாக இருக்கும் என்றும்‌ கூறப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top