Home
You Are Here: Home » News » மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி

மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி

மருத்துவப்படிப்பை மீண்டும் தொடர தங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டி.டி.மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் டி.டி.நாயுடு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்‌, தங்கள் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதால் தங்களை வேறு கல்லூரியில் சேர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்‍.

இந்நிலையில் மீண்டும் மருத்துவப்படிப்பினை தொடர தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும்‌, தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பூந்தமல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍.

அப்போது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்

படிப்பு தேவை என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top