Home
You Are Here: Home » News » India » 7 வது‌ ஐபிஎல் போட்டி – கோல்கத்தா அணி சாம்பியன்

7 வது‌ ஐபிஎல் போட்டி – கோல்கத்தா அணி சாம்பியன்

7 வது‌ ஐபிஎல் இறு‌தி போட்டியில் கோல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது‌.

பெங்களூரில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் இறு‌தி போட்டியில், பஞ்சாப்பும், கொல்கத்தாவும் மோதின.
முன்னதாக டாஸ் வென்ற கோல்கத்தா அணி,முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் அணியில், சேவாக் 10பந்துகளில் 7 ரன்னுடன் ஆறுதல் அடைந்து வெளியேறினார்.

வோரா அதிரடி காட்டி 67 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 67 ரன் குவித்தார்.

பெய்லி வந்த வேகத்தில் 1 ரன்னுடன் வெளியேறினார். சாஹா மட்டும் அதிரடி காட்டி 55 பந்துகளில் 8 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 115 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது‌.

இதையடுத்து‌, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 3 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்னில் வெளியேறினார்.

காம்பிர் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். அடுத்து வந்த பாண்டேயும் யூசுப் பதானும் அதிரடி காட்டினர்.
பதான் 22 பந்தில் 33 ரன் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும்.

பாண்டே 50 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 94 ரன் குவித்தார்.
இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்குச் சென்றது போல் இருந்தது.

ஆனால், கொல்கத்தா வெற்றிக்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற சமநிலைக்கு வந்தது‌..
இந்நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்ட சாவ்லா 5 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் பவுண்டரியுடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கோல்கத்தா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து‌ 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது‌.
இதன் மூலம் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
பஞ்சாப் அணி துவக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. இந்த முறை பட்டம் வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணியாக இருந்தது. ஆனால் கடைசிக் கட்டத்தில் கோட்டை விட்டு, பரிதாபமாகத் தோற்றது பஞ்சாப்அணி.
சிறந்த ஆட்ட நாயகனு‌க்கான விருது‌ கொல்கத்தா அணியை சேர்ந்த பாண்டேவுக்கும், தொடர் ஆட்டநாயகனு‌க்கான விருது பஞ்சாப் அணியை சேர்ந்த‌ மேக்ஸ் வெல்லு‌க்கும் வழங்கப்பட்டது‌.
————

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top