Home
You Are Here: Home » News » முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டியாங்குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அப்போது, எவ்வித பணியும் நடைபெறாமல் ஆறு லட்சம் ரூபாய் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி, ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணனை முற்றுகையிட்டனர்.

அத்துடன் ஆறு லட்சம் ரூபாய்க்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனால் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்தி்ற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதனிடையே, வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள திருமால்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கிராமபுறங்களில் பயனற்று இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருக்கும்பட்சத்தில், அதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மக்களும், தங்களது பகுதிக்கு நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மனு அளித்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top