Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » தளி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை – வீடுகள் சேதம்

தளி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை – வீடுகள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததை அடுத்து, மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், கிராமமே இருளில் மூழ்கியது.

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்ததோடு, வீட்டில் உள்ள பொருட்களும் சேதமானது.

மேலும், அங்குள்ள மின்கம்பங்கள் கீழே சாய்ந்த விழுந்ததில், தளி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. அத்துடன் ஆடு மற்றும் மாட்டு கொட்டகைகளிலும் மழைநீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து பலத்த சேதம் அடைந்ததால், தளி பகுதியில் உள்ள மக்கள் அனைவரும், தங்களது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

தளி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆச்சுப்பளு, நெல்லுமார், லம்பாடி தொட்டி, அம்பாலை தொட்டி, மற்றும் மாஸ்தப்ப தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியது. மேலும், சூறாவளி வீசியதால் சேதம் அடைந்த வீடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மழையினால் சேதம் அடைந்த பகுதிகளை வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவக்கி உள்ளனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top