Home
You Are Here: Home » News » India » உலகக் கோப்பை ஹாக்கி போட்டி – இந்திய அணி போராடி தோல்வி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி – இந்திய அணி போராடி தோல்வி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியத்திடம் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் மோதின.

பெல்ஜியத்தின் வேன் அபெல் ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முற்பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, ஒன்றுக்கு – பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷத்துடன் ஆடினர். 44-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் ஒன்றுக்கு – ஒன்று என்ற கணக்கில் சமநிலை அடைந்தது. அடுத்த ஆறாவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார்.

ஆனால், 55-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெகர்டு ஒரு கோல் அடிக்க 2-2 என ஆட்டம் சமநிலை அடைந்தது. பின் இரு அணிகளும் கோல் விழாமல் பார்த்துக் கொண்டன. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெல்ஜியத்தில் டோமென், கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்‍. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3 க்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top