Home
You Are Here: Home » News » காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மாம்மரங்கள் சேதம் – விவசாயிகள் கவலை

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மாம்மரங்கள் சேதம் – விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால் ஏராளமான மாம்மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள ‌மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியான செண்பகதோப்பு பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்மரங்கள் விளைவிக்கப்படுகின்றன.

தற்போது மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் கோடை வெப்பம் தாக்கம் அதிகமாக உள்ளதால், அங்குள்ள காட்டு யானைகள், தண்ணீரை தேடி செண்பகதோப்பு பகுதிக்கு செல்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் செண்பகதோப்பு பகுதிக்கு செல்லும் காட்டு யானைகள் அங்குள்ள மாம்மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், காட்டு யானைகளால் சேதம் அடைந்துள்ள விளை பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்‍..

வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வெளியேறுதை தடுக்க, வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top