Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » கிராணைட் கற்கள் பறிமுதல்

கிராணைட் கற்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்லப்பட்ட இரண்டு கோடி மதிப்பிலான கிராணைட் கற்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வள்ளி தலைமையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கிராணைட் கற்களை ஏற்றி சென்ற ஆறு லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, எவ்வித ஆவணமும் இன்றி ஆந்திராவில் இருந்து கர்நாடகாவிற்கு கிராணைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, கிராணைட் கற்களை லாரியுடன் பறிமுதல் செய்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‍.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தமிழ்நாடு வழியாக கிராணைட் கற்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, வட்டாட்சியர் மேற்கொண்ட வாகன சோதனையில், கிராணைட் கற்கள் கடத்தி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கிராணைட் கற்களின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top