Home
You Are Here: Home » News » விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் அதிகாரி எச்சரிக்கை

விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் அதிகாரி எச்சரிக்கை

புது‌க்கோட்டையில், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்‍.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 72 தனியார் பள்ளிகளில் மொத்தம் 397 வாகனங்கள் உள்ளன. இதில், புதுக்கோட்டையில் உள்ள 207 வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்‍.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது‌ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் பகுதி பள்ளி வாகனங்களும் அந்தந்த பகுதிகளிலேயே ஆய்வு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top