Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » அந்தியூரில் அதிமுக பிரமுகர் மீது நிலஅபகரிப்பு புகார்

அந்தியூரில் அதிமுக பிரமுகர் மீது நிலஅபகரிப்பு புகார்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஒன்றை கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக பதவி வகிப்பவர் ஜானகி. இவரிடம் அந்தியூர் அதிமுக ஒன்றிய செயலாளரும், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான கே.பி.எஸ். ராஜா, மணல் அள்ளும் உரிமம் பெற்று தருவதாக கூறியுள்ளார்‍. இதற்கு ஈடாக ஒன்றை கோடி மதிப்பிலான நிலத்தை பவர் எழுதி தரவேண்டும் என்று கூறி ஜானகியின் நிலத்தை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் மணல் அள்ளும் உரிமம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜானகி, தனது நிலத்தை திருப்பி கேட்ட போது, அவரை ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது நிலத்தை மீட்டுத்தரும்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஜானகி புகார் கொடுத்துள்ளார்‍.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதாக உறுதி அளித்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top