Home
You Are Here: Home » News » India » ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு – தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகள் பறிமுதல்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு – தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகள் பறிமுதல்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில், தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்‌, சூதாட்ட புகார், பெரும் புயலைக் கிளப்பியது. கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப ஆடி, பந்தயத்தின் போக்கை திட்டமிட்டு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தியது. ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சூதாட்டத்தின் பின்னணியில், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம், அவனது கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவீது சுதானி, சல்மான் என்ற மாஸ்டர், எதேஷாம் ஆகியோர் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனால், மேற்கண்ட 5 பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அனைவர் மீதும் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேருக்கு எதிராக, ஜாமீனில் விட முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார், குற்றவாளிகள் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்‌.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top