Home
You Are Here: Home » News » India » அகில இந்திய ஹாக்கி போட்டி – சென்னை தெற்கு ரயில்வே அணி தோல்வி

அகில இந்திய ஹாக்கி போட்டி – சென்னை தெற்கு ரயில்வே அணி தோல்வி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரயில்வே அணி தோல்வியடைந்தது.

கோவில்பட்டியில் கடந்த 23-ந்தேதி முதல் அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் போட்டியில், சென்னை சென்ட்ரல் எக்சைஸ் அணியும், பெங்களூர் பி.சி.டி.சி. அணியும் மோதியது. இதில் பெங்களூர் பி.சி.டி.சி. அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, ஜலந்தர் இ.எம்.இ. அணியுடன், சென்னை தெற்கு ரயில்வே அணி மோதியது. இதில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய ஹாக்கி போட்டியின் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியுடன், பெங்களூர் பி.சி.டி.சி. அணி மோதுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜலந்தர் இ.எம்.இ. அணியும், பெங்களூர் கனரா வங்கி அணியும் மோதுகிறது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top