Home
You Are Here: Home » News » தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும், தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்சியில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும், தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் 2 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினர்.

விவசாய நகை கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் நகைகள் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், சூறாவளி காற்றால் சேத‌மடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்‍. தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற கரும்பு ஆலை நிர்வாகிகளிடம், அரசு நிர்ணயித்தபடி கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஆலைக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top