Home
You Are Here: Home » News » தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலை கடை திறப்பு

தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலை கடை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாயவிலை கடையை தேமுதிக எம்எல்ஏ எல்.வெங்கடேசன் திறந்து வைத்தார்.

உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள தாசர்புரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக இர‌ண்டு கிலோமீட்டர் தூரமுள்ள நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்‍.

தங்களது பகுதியில் புதியதாக நியாயவிலை கடை கட்டித்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து திருக்கோவிலூர் தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளருமான எல்.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில் புதிததாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் திறந்து வைத்ததார்‍.

கடந்த 25 ஆண்டு காலமாக இர‌ண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்கியதாகவும், தற்போது வீட்டின் அருகிலேயே நியாயவிலை கடை திறக்கப்பட்டதற்கு உறுதுணையாக இருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top