Home
You Are Here: Home » News » India » கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா கருத்துக்கு அக்கட்சியின் மேலிடம் கடும் கோபம் அடைந்துள்ளது

கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா கருத்துக்கு அக்கட்சியின் மேலிடம் கடும் கோபம் அடைந்துள்ளது

ராகுல்காந்தியை விமர்ச்சித்ததற்காக நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, தற்போது‌ தாம் ஒரு சுதந்திரமான மனிதன் என்று‌ கூறியுள்ளது‌ அக்கட்சியின் மேலிடத்தை கடும் கோபம் அடைய வைத்து‌ள்ளது‌.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 500 இடங்களுக்கு மேல் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது

இந்த தோல்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலே காரணம் என்று‌ம், அவர் இணையதளத்தில் அளித்த சில முரண்பட்ட தகவல்கள் மற்று‌ம் நடவடிக்கைகள்தான் காரணம் என்று‌ம், கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முஸ்தபா விமர்ச்சித்திருந்தார்.

மேலு‌ம், ராகுல்காந்தி ஒரு ‘ஜோக்கர்’ எனவும், அவரால், ”கட்சியை ராகுலால் காப்பாற்ற முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதனால், முஸ்தபா உடனடியாக கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து‌நீக்கப்பட்டார்.

அது‌குறித்து‌ தற்போது ‌செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து‌ள்ள முஸ்தபா, காங்கிரஸ் கட்சியில் இருந்து‌தனக்கு விடுதலை கிடைத்திருப்பதாகவும், இப்போது சுதந்திரமான முறையில் கருத்துக்களை தெரிவிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் தான் பொறுப்பு என, மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா கூறினார். அதேபோல், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் விமர்ச்சித்திருந்தது.

தொடர்ந்து‌, காங்கிரஸ் கட்சியில் ராகுலு‌க்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து‌ வருவதால், காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் கோபத்தில் ஆழ்ந்து‌ள்ளது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top