Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சாவை கடத்திய ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், மதுரையில் இருந்து பேருந்து மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக புறநகர் பகுதியான மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் இறங்கிய ரமேஷ், கஞ்சா பொட்டலம் அடங்கிய பையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற காவல் துறையினர் ரமேஷ் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷை காவல் துறையினர் கைது செய்ததோடு, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்‍.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. மேலும் ரமேஷிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‍.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top