Home
You Are Here: Home » News » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அனைவரும் முழக்கம் எழுப்பினர்.

இதனையடுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top