Home
You Are Here: Home » News » பொன்னேரி அருகே லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது

பொன்னேரி அருகே லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 700 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அடுத்துள்ள திருவென்னைவாயல் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் கணேஷ்.

இவரிடம் நெய்தவாயல் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர், தனது புதிய வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். நீண்ட நாளாகியும், மின் இணைப்பு தராத காரணத்தால் சுந்தரம், மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இளநிலை பொறியாளர் கணேஷிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது புதிய மின் இணைப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுந்தரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து லங்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்த அறிவுரையின் பேரில், ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை இளநிலை பொறியாளர் கணேஷிடம், சுந்தரம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கணேஷை கைது செய்ததோடு, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top