Home
You Are Here: Home » News » பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோலின் அளவு குறைவாக இருப்பதாக கூறி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு முன்பு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

கடந்த ஆறு மாத காலமாக சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோலின் அளவு குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும், ஒவ்வொரு லாரிகளிலும் 30 முதல் 40 லிட்டர் வரை பெட்ரோல் மற்றும் டீசல் குறைவாக அனுப்பி வைக்கப்படுவதாகவும், சரியான அளவுகளில் அனுப்பும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்‍.

சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் இருந்த சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்களின் அளவு குறைவாக இருப்பதாக கூறி காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், ஆறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top