Home
You Are Here: Home » News » திருச்சியில் செல்லப்பிராணிகளுக்கான போட்டி நடைபெற்றது

திருச்சியில் செல்லப்பிராணிகளுக்கான போட்டி நடைபெற்றது

திருச்சியில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்கான போட்டியில் பல்வேறு நாய்கள் பங்கேற்றதோடு, போலீஸ் நாய்களும் கலந்துகொண்டு நெருப்பு வளையத்திற்குள் தாண்டி சாகசம் செய்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

தனியார் பிராணிகள் மையம் சார்பில், திருச்சியில் நடைபெற்ற இக்கண்காட்சியில் செயின்ட்பிராண்ட்‌, கோல்டன் ரெட்ரீவர்‌, ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன்‌, சிப்பிப்பாறை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

நாய்களின் வளர்ச்சி, ஆரோக்கியம்‌, உரிமையாளர்களின் உத்தரவிற்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

மேலும், இதில்‌, ரயில்வே பாதுகாப்பு படை, சிறைத்துறை, தமிழ்நாடு காவல்துறை ஆகியவற்றில் உள்ள மோப்ப நாய்களும் கலந்துகொண்டு நெருப்பு வளையங்களை தாண்டுவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது..

போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, பார்வையாளர்களை கவர்ந்த நாய்களின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top