Home
You Are Here: Home » News » உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து – 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து – 2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிலாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மோதியதில்‌, ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த தமிழ் என்பவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்‍.

இதனிடையே விபத்து ஏற்படுத்திய மினிலாரியை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்‍. அப்போது ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்‍. இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்‍.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top