Home
You Are Here: Home » News » உதகமண்டலத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்

உதகமண்டலத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகமண்டலத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகின்றது. இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். குறிப்பாக உதகமண்டலத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்ட‌பெட்டா மலை சிகரம், படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக துடுப்பு படகு, மிதிபடகு, விசைப்படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படகு இல்லத்தில் உணவு இடைவேளையின் போது, படகு ஓட்டுவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், அப்போது படகு ஓட்டுநர்களுக்கும், படகு இல்லத்தின் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, படகு ஓட்டுநர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்‍.

மேலும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறி படகை இயக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து படகு சவாரிக்காக பணம் கட்டியவர்களுக்கும் பணம் திருப்பி தரப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top