Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » கொடைக்கானல் அருகே லாரிகள் சிறைபிடிப்பு

கொடைக்கானல் அருகே லாரிகள் சிறைபிடிப்பு

கொடைக்கானல் அருகே லாரி மின்கம்பத்தில் மோதி அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது..

கொடைக்கானலில் அதிக அளவு மரங்கள் அனுமதியின்றி வெட்டிக் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை இரவு நேரங்களில் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும்போது மின் கம்பங்களில் உரசி பாதிப்பு ஏறபடுவது வழக்கமாக உள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.நேற்றிரவும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் மின்சாரம் முற்றிலம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியலால் சுமார் 4 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாக காவல்துறையினரும் வராததால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசை கட்டி நின்றிருந்தன. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையிர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top