Home
You Are Here: Home » News » கும்பகோணம் அருகே சாலை விபத்து – 3 மாணவர்கள் பலி

கும்பகோணம் அருகே சாலை விபத்து – 3 மாணவர்கள் பலி

கும்பகோணம் அருகே அரசு பேருந்தும், இருசக்கரவாகனமும் மோதிக்கொண்டதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தூர்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சூர்யா, வினோத், டேனியல் 6 மாணவர்கள் நாச்சியார்கோவிலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரண்டு மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்களது வாகனங்கள் மாத்தூரை நெருங்கியபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்தும் இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கோண்டன.

இந்த விபத்தில் சூர்யா, வினோத், டேனியல் ஆகிய 3பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு வாகனத்தில் வந்த மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கம்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்கு்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.அனல்மின் நிலைய முதலாவது உலையில், கடந்த 20-ம் தேதி கொதிகலன் வெடித்ததில் பொறியாளர் செல்வராஜ் உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த 6 பேரில் நேற்றிரவு ஒருவர் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top