Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » பக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

பக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

பக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் தாமஸ் கில்டஸ். இவர் கடந்த 9 ஆண்டுகளாக பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 21ம் தேதி இவர் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பக்ரைன் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தாமஸ் கில்டசின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி இன்று அதிகாலை தாமஸ் கில்டசின் உடல் ராஜாக்கமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கபப்ட்டது.

அதன்பிறகு மீனவரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகலு‌க்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்து‌ள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top