Home
You Are Here: Home » News » கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்‌, கார்பைட் கற்கள் மூலம் சுமார் 3ன் எடையுள்ள மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் திருவண்ணாமலை நகாட்சிக்குட்பட்ட பல்வேறு கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்‍.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top