Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை

தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை

உரிய சிகிச்சை இன்றி குழந்தையை உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

ஈரோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ். கூலி தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி, பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தையை வெறோரு மருத்துமனைக்கு கொண்டு செல்ல வாகன வசதி செய்து கொடுக்காததால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள்‌, மருத்துமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஈரோடு நகர காவல்துறையினர், குழந்தையின் உறவினர்களிடம் சமசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top