Home
You Are Here: Home » News » Karnataka » ப.சிதம்பரம் போட்டியிட கடும் எதிர்ப்பு

ப.சிதம்பரம் போட்டியிட கடும் எதிர்ப்பு

மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து போட்டியிட அந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.கே.ஹரிபிரசாத், பாஜகவின் பிரபாகர்கோரே, எம்.ரமாஜாய்ஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் 3 வேட்பாளர்களும், உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் 4-ஆவது வேட்பாளரையும் நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.கே.சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top