Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » அபூர்வ வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற 4 பேர் கைது

அபூர்வ வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற 4 பேர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வனப்பகுதியில் அபூர்வ வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் வனத்துறையினர் கடம்பூர் மற்றும் குன்றி வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குரும்பூர்பள்ளம் அருகே பாலேறு பள்ளத்தில் இருந்து 2 டிராக்டர்களில் 5 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து‌ டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது,

கைதானவர்களை காவல்நிலையத்துக்கு கொண்டுசெல்லும்போது, வனப்பகுதியில் செம்புளிச்சான் எனப்படும் அரிய வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற செந்தில்குமார், பச்சையப்பன், செங்காட்டை சேர்ந்த குப்புசாமி, உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல கல்கம்பூரைச் சேர்ந்த முத்துசாமி, பெரியசாட்டியை சேர்ந்த சடையப்பன், மூலக்கடம்பூரை சேர்ந்த தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பைட் – தம்பநாயக்கர் வனஅலுவலர் டி.என்.பாளையம்

அதனைத்தொடர்ந்து‌, மரங்கள் கடத்த முயன்ற 4 பேரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top