Home
You Are Here: Home » News » தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

வந்தவாசி அருகே 10 நாட்களாக தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை பகுதி 2வது வார்டு பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகள் செயல்படவில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பந்தங்கள் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரங்களில் மின்விளக்குகள் செயல்படாததால் சாலையில் பெண்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மின்விளக்குகள் சீரமைத்து தரப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். நள்ளிரவில் மெழுகு வர்த்திகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top